ஈரோடு தமிழன்பன் வானொலி உரை - ஏப்ரல் 25, 2020    புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் காலத்தில் அவருடன் வாழ்ந்து இன்று நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும்  மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் வாயிலாக பாரதிதாசனைப் பற்றி அறிந்து கொள்வோம்.  நேரலையில் இணைந்து கலந்துரையாடலில் பங்கு பெறலாம்.  நிகழ்ச்சியை கேட்க : http:// AmericanTamilRadio.com     https://www.facebook.com/photo.php?fbid=236891510861605&set=gm.1311123589085497&type=3&theater&ifg=1       
Posts
- Get link
 - X
 - Other Apps
 
     பாரதிதாசன் கவிதை செக் நாட்டு முனைவர் மொழிப்பெயர்ப்பு கடிதம்    பாவேந்தரின் இலக்கியங்களின் பெருமையை தமிழர்களாகிய நாம் மட்டுமல்ல, மேலை நாட்டவரும் உணரந்தேயிருந்தனர்.   1962-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் செக்கோச்லேவேகியாவிலிருந்து (Czechoslovakia) பாவேந்தரின் இல்லத்திற்கு ஒரு செய்தித்தாள் வந்தது.   அதில் செக் (Czech )  நாட்டு அறிஞரான முனைவர் காமில் சவெலபில் (Dr. Kamil Václav Zvelebil) என்பவர் பாவேந்தரின் சில கவிதைகளை செக் மொழியில் மொழி பெயர்த்து இவருடைய படத்தோடு அச்செய்தித்தாளில் அழகாக வெளியிட்டருந்தார். முனைவர் காமில் சவெலபில் செக் நாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை தலைவராக பணியாற்றியவர். அவர் பாவேந்தருக்கு எழுதிய கடிதம் வாசகர்களுக்காக இங்கே இணைத்துள்ளோம். நன்றி!                 
- Get link
 - X
 - Other Apps
 
   தாலாட்டு    தாய்மை அழகு. தாலாட்டு பாடல் பாடும் பழக்கும் இருந்தால் அத்தாய்மையின் முழு அழகையும் அச்சேய் பெற்று இன்புறம் என்று கருத்துக்கு எதிர்வாதம் உண்டோ?   சிற்றூர்களில் குழந்தையை தூங்க வைக்க வயலோருமும், மரத்தடியிலும் ஒலிக்கும் தாய்மார்களின் குரல், அக்குழந்தை பெற்ற பெரும் பேறு! அதன் இனிமை அழகினும் அழகு! நாம் அதனை மகிழ்ந்தோம். ஏனோ நம் அடுத்த தலைமுறைக்கு தர மறந்தோம்!   புரட்சிக் கவிஞரின் தாலாட்டு பாடல்களை பாட பயிற்சி எடுங்கள்!  தமிழின்பத்தில் மகிழுங்கள்! அவரின் சொற்கள் எளிமையாக இருக்கும்.. பாடவதற்கு ஏற்ற இனிமையான தாளமெட்டு இருக்கும்!   ஆண் குழந்தை, பெண் குழந்தை என இருவருக்கும் தனித்தனியே தாலாட்டு பாடல்கள் உள்ளன! இங்கு இணைத்துள்ள பெண் குழந்தை தாலாட்டு பாடலை கேட்டு மகிழுங்கள்!   பொதுவான தாலட்டு பாடல்களையும் இயற்றியுள்ளார். அவர் தமிழ்த் தொண்டை அளக்க கருவிகள் உண்டோ?.   தொட்டிலில் ஆடும் கிளியே -  என் தூய தமிழின் ஒளியே கட்டிக் கரும்பே தூங்கு - முக் கணியின் சாறே தூங்கு தட்டிற் பாலும் சோறும் - நான் தந்தே னேநாள் தோறும் சுட்டப் பத்துடன் வருவேன் - நீ தூங்கி எழுந்தால் தருவேன்!    (இளைஞர்...
படி!!!
- Get link
 - X
 - Other Apps
 
  நூலைப் படி - சங்கத்தமிழ்    நூலைப்படி - முறைப்படி   நூலைப்படி   உடனெடுப்பு:   காலையில் படி - கடும்பகல் படி   மாலை இரவு பொருள்படும்படி ( நூலைப் படி )   அடிகள்:   கற்பவை கற்கும்படி   வள்ளுவர் சொன்னபடி   கற்கத்தான் வேண்டும் அப்படிக்   கல்லாதவர் வாழ்வ தெப்படி ? ( நூலைப்படி)   அறம்படி பொருளைப் படி   அப்படியே இன்பம் படி   இறந்த தமிழ்நான் மறை   பிறந்த தென்று சொல்லும்படி (நூலைப்படி)   அகப்பொருள் படி அதன்படி   புறப்பொருள் படி நல்லபடி   புகப் புகப் படிப்படியாய்ப்   புலமை வரும் என்சொற்படி (நூலைப்படி)   சாதி என்னும் தாழ்ந்தபடி   நமக் கெல்லாம் தள்ளுபடி!   சேதி அப்படி! தெரிந்து படி   தீமை வந்திடு மேமறுபடி (நூலைப்படி)   பொய்யிலே முக்காற்படி   புரட்டிலே காற்படி   வையகமே ஏமாறும்படி   வைத்துள்ள நூற்களை ஒப்புவதெப்படி?   (நூலைப்படி)   தொடங்கையில் வருந்தும்படி   இருப்பினும் ஊன்றிப்படி   அடங்காஇன் பம்மறுபடி   ஆகும்என்ற ஆன்றோர்சொற்படி (நூலைப்படி)   தகவல்:   30.12.1958 குயில் ஏட்டில் பாரதிதாசன் எழுதிய கவிதை   இசை: யதுகுலகாம்போதி தாளம்: ஆதி